மூன்றே நாளில் முகப்பருவிற்கு உடனடி தீர்வு..!

0

பீட்ரூட் – பாதி அளவு(நறுக்கியது)
தண்ணீர் – 2 ஸ்பூன்
சாதம் – 2 அல்லது 3 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 2 அல்லது 3 ஸ்பூன்
தேவைப்பட்டால் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு சேர்க்கலாம்.

முதலில் பீட்ரூட்டினை கழுவி பாதி அளவிற்கு எடுத்து கொள்ளவும். அடுத்து அதன் மேல் தோல் பகுதியினை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு 2 ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவேண்டும். அரைத்த சாற்றினை வடிகட்டியால் வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அடுத்ததாக பீட்ரூட் அரைத்த ஜாரிலே 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு சாதம் எடுத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த சாதத்துடன் தனியாக எடுத்து வைத்த பீட்ரூட் சாற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த பிறகு தனியாக பவுலில் எடுத்து கொள்ளவும். இவற்றில் ரோஸ் வாட்டர் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.

அவ்ளோதாங்க இந்த பேஸ் பேக். இந்த பேஸ் பேக்கை முகத்திலிருந்து கழுத்து பகுதி வரையிலும் தடவிவர வேண்டும். 20 முதல் 30 நிமிடம் வரை வைத்திருந்து சோப் எதுவும் பயன்படுத்தாமல் சாதாரண நீரில் முகத்தினை வாஷ் செய்யலாம்.

இந்த பேஸ் பேக்கை இரவு படுக்கைக்கு முன்பு தடவி வைத்து சிறிது நேரம் பின்னர் வாஷ் செய்தால் முகத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.

Leave a Reply