திடீரென மூடப்படும் அரச வைத்தியசாலை! : வெளியான காரணங்கள்!

0

நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலைக்கு வரமுடியால் உள்ளது. இதனால் வைத்தியசாலையின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வைத்தியசாலையை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட போதிலும் சரியான நடைமுறை இல்லாத காரணத்தினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சீருடையில் எரிபொருளைப் பெறச் சென்றாலும், அடையாளத்தைச் சரிபார்த்த பின்னரும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இருக்கும் மக்கள் அதற்கு முன்னுரிமையோ சந்தர்ப்பமோ கொடுப்பதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply