சுகாதார சேவைகள் முடக்கம் அபாயம்.

0

எரிபொருள் இன்மை காரணமாக வருமுன் காப்பு பணியாளர்களான பொது சுகாதார பரிசோதகர்களது பணியும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று பணிக்கு செல்வதற்காக குஞ்சர்கடை, நெல்லியடி, மந்திகை, கிராமக்கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சென்ற போது பெட்ரோல் இல்லை என சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களும் கைவிரித்த நிலையில் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் திரும்பி சென்றுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு
பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்களே இவ்வாறு பெட்ரோல் இன்றி திரும்பி சென்றுள்ளனர்.

அங்கு பெயர் குறிப்பிட விரும்பாத பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்து தெரிவிக்கும் போது தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மேலும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்கள் என எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

Leave a Reply