கர்ப்பத்துக்கு முயற்சிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!

0

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை அடைய வேண்டும் என்பது தவம். பெண்ணுக்கு திருமண வயது என்பது 21. ஏனெனில் 21 வயதுக்கு பின்னர் தான் கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்கள் உடல்ரீதியாக பலம்அடைவார்கள். 22 வயது முதல் 26 வயது வரை கர்ப்பம் தரிக்க மிக ஏதுவான வயதாக பார்க்கப்படுகிறது. 30 வயதை கடந்தால் கர்ப்பம் தரிக்கும்வாய்ப்பு குறைந்து கொண்டே செல்லும்.

எனவே குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களுக்கு அவர்களது கருமுட்டை ஆராக்யமாக இருக்க வேண்டும். இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்துவிடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன்(ovulation) என்று பெயர்.

மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14 வது நாள் வரை பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்தில் ஆணின் விந்தை சந்தித்தால் கருகட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும். ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட் செலுத்தப்பட்டு 72 மணி நேரங்கள்( 3நாட்கள்) வரை உயிருடன் இருக்கும். எனவே கர்ப்பம் தரிக்க உகந்த காலம் என்பது மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோறாவது நாளுக்கும் 14வது நாளுக்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இந்த சமயத்தில் தினசரி உறவு வைத்துக்கொண்டால் கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.

உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உபயோகிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கர்ப்பம் அடைய நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

கர்ப்பத்திற்கு திட்டமிடும் போது, புகை பிடித்தல் மற்றும் அதிகமாக காபி குடித்தல் ஆகியவை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நிகோடின் மற்றும் ஆல்கஹால் இவை ஆண் மற்றும் பெண் இருவரின் கருவுறும் வளமையைப் பாதிக்கும். – Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply