வழமைக்குத் திரும்பும் எரிபொருள் விநியோகம்.

0

எரிபொருள் விநியோகம் இன்று முதல் வழமைக்கு கொண்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் விசாக பூரணி தினம் , விடுமுறை என்பதால் நேற்றைய தினம் எரிபொருள் விநியோக நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கமைய இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும்.

அவ்வாறு ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் தங்கும் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்திய கடனில் வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகுதி டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த டீசல் தொகை டொம் எல்வின் நிறுவனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் கிடைக்கப் பெறாமை காரணத்தால் நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply