கர்ப்பத்தின் போது கால் வீக்கம் குறைய என்ன செய்யலாம்?

0

கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் குறைய நீச்சல் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி. நீச்சல் அடிப்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

நீச்சல் பயிற்சி முறைப்படி கற்றறிந்த கர்ப்பிணிப் பெண்கள் நீச்சல் அடிக்கலாம். இதன் மூலம் கால் வீக்கத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அத்துடன் சற்று மென்மையான ரகம் கொண்ட காலணிகளை அணிவது சிறந்தது. கடுமையான ரக செருப்புகள் மற்றும் ஹீல்ஸ் வைத்த செருப்புகளை முற்றிலுமாகக் கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும்.

அவ்வாறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் போதிய தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு செய்யும் பொழுது உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் நீங்கும். கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் குறைவதுடன், கால் வீக்கம் வடிய வாய்ப்பு உள்ளது.

ஈரத்துணியை கொண்டும் அல்லது ஐஸ் கட்டி (Ice pack) கொண்டு நன்கு ஒத்தரம் கொடுக்கலாம்.

Leave a Reply