தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பது மிகவும் நல்லது. காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை தூண்ட செய்யும் காரணியாகும்.
எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்த்து கொள்ளவும்.
அவ்வாறு புகை பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் இரண்டும் இரத்த அழுத்தம் வருவதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. புகைப்பிடிப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணியாக உள்ளது.
ஆல்கஹால் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே இந்த பழக்கங்களை தவிர்த்து கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.



