புருவம் எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்…!!

0

பிராணன் இயங்கி வரும் இடமான புருவ முடிகள் நம்முடைய இறப்பு காலம் நெருங்கி வரும் நிலையில் புருவத்தின் முடிகளை கையில் தொட்டாலே வந்துவிடும்.

உடலில் உள்ள ப்ராணன்கள் குறைந்து போவதாலே புருவ முடிகள் அனைத்தும் உதிர்ந்து போய் விடுகின்றன.

பெண்கள் பார்லர் அல்லது வீட்டிலோ புருவம் எடுக்கின்ற போது கண்களை சுற்றியுள்ள வர்ம பகுதிகளான நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் என்று சொல்லக்கூடிய பொட்டுவர்மம்(அ) சுடரொளியின் காலம், மின் வெட்டி வர்மம், மந்திர காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் உள்ளது.

இதனால் பெண்கள் உடலில் பிராண சக்திகள் குறைய தொடங்குகிறது. இந்த பிராண குறைவின் காரணமாக ஆயுட்காலம் குறைந்து, பிராண சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பெற வாய்ப்புள்ளது.

புருவம் எடுப்பதால் ஆயுள் காலம் மட்டும் குறைவதோடு இல்லாமல் உடலில் பல நோய்கள் வரவும் காரணமாக இருக்கிறது.

புருவ முடிகளை சிதைப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியாது. இதனால் வர்ம பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியினை எந்த விதத்திலும் நாம் சிதைப்பது மிகவும் தவறான செயலாகும்.

மேலும் நம் உடலின் மிக முக்கிய சக்தி பாதைகள் கண்களுக்கு அருகில் உள்ளன. அதனால் இந்த பகுதிகளில் கை வைப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கினை தேடி செல்வது போன்று இருக்கும்.

Leave a Reply