இது தொற்றுநோய் அல்ல. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து சத்துக்களும் சம அளவில் கலந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.
காலை மற்றும் மாலை வேளைகளில் இளம் சூரிய ஒளி உடலில் படுமாறு குறைந்தது 30 நிமிடங்களாவது இருப்பது நல்லது.
வெண்புள்ளி நோய் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், சுற்றத்தாரும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
எந்த காரணத்துக்காகவும் அவர்களை புறக்கணிக்கக்கூடாது.



