கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

0

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதிப் பகுதி இன்று மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க பிரிவின் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 45 கழிவு கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் சீ.ஐ. சீ. டீ முனையத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்படவுள்ளது.

மேலும் மருத்துவ இரசாயன கழிவுகள் உளிட்ட 242 கொள்கலன்கள் 2019 ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அவை களஞ்சியப்படுத்த பட்டிருக்கின்றன.

மேலும் குறித்த கொள்கலன்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply