நீர் அருந்துதல்..!!

0

உடலின் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது. ‘நீரின்றி அமையாது உடல்’ – உடலின் நீர் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும்.

இல்லையேல் உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்காது.

ஹார்மோன்கள் சரிவரச் செயல்படாது. சத்துப் பொருட்கள் சரியாகச் செல்களுக்குச் சென்று சேராது.

பிராண வாயு உடலின் பகுதிகளுக்குச் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு இதயத் துடிப்பு அதிகரிக்கும்,

இதயம் சோர்வடையும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது மூலம் சிறுநீரகம் சரியாகக் கழிவுகளை வெளியேற்றும், மலச்சிக்கல் நீங்கும், வயிற்றில் அமிலத்தன்மை குறையும்.

உடல் சூடு தணியும். தேவையான நீர் அருந்தினால் நீர் ஓர் அருமருந்து என உணர முடியும்.

Leave a Reply