நரம்புத் தளர்ச்சியின் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுவது நல்லது. 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் ஆண்மை தன்மை சீரடையும்.
இரத்த மண்டலத்தில் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கு தேவையான வேதிப்பொருட்களை செவ்வாழைப்பழம் தருவதால் ஆண்மை ஊக்கியாக செயல்படுகிறது.
மேலும் குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழத்தை அரை டீஸ்பூன் தேனுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
21 நாட்களுக்கு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வர பல் வலி, பல்லசைவு , ஈறுகள் பலமடையும்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் மூல நோய்க்கு மிகச்சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது .
எந்த ஒரு பழத்தையும் சமைத்த உணவோடு நாம் சேர்த்து சாப்பிடும்போது அது நன்கு செரிமானத்தை ஏற்படுத்தும்.
அதில் உள்ள சத்துக்கள் நம் உடம்பிற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும்.



