அரிய வகை மீன் இனத்தை பிடித்த குற்றச்சாட்டில் இருவர் அதிரடி கைது.

0

ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரிய வகை மீன்களைப் பிடித்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் இருவரும் வன ஜீவராசி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகவே குறித்த மீன்களை பிடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படவுள்ளனர்.

Leave a Reply