களனி திஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்திற்கு அருகில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றினால் அவசர பராமரிப்புக்காக அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கிடைத்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூட் நவமணி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேற்படி தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக தேசிய மின் கட்டமைப்பு 160 மெகாவாட் மின்சாரத்தை வழங்க முடியும்.
மேலும் மின்சாரம் துண்டிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



