நாடு பூராகவும் 63வது குடியரசு தினம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும்.
குறித்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே ஆளுநர் ஆர். என். ரவி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து மேடைக்குச் சென்று ஆளுநர் ஆர். என். ரவி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை , காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



