நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் சிகிச்சை பெறும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் அதிகபட்ச கொள்ளளவை தற்போது ஒட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



