கடந்த சில நாட்களாக சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றின் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் 27 ரூபா வரையில் அதிகரித்த முட்டையின் விலை தற்போது 21 ரூபாய் விலையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக, கால்நடை வளங்கள், பண்ணை மேம்பாட்டு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ. பி ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின்சாரம் தொடர்பான பிரச்சனை கால்நடை பராமரிப்புக்கு தாக்கம் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளில் மின்பிறப்பாக்கி பயன்படுத்தி குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே உற்பத்தியாளர்கள் இறைச்சி மற்றும் முட்டையின் அவற்றின் விலைகளை தாமாகவே குறைத்துள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.



