ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் அதிரடி கைது.

0

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் தங்காலை விசேட அதிரடிப்படையினர் திக்வெல்ல நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 122 கிரேம் ஹெரோயின் மற்றும் இலத்திரனியல் தராசு கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

Leave a Reply