நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை.

0

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக சீமெந்து விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கு நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பிரகாரம் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, குருநாகல், இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, அனுராதபுரம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 56 சிமெண்ட் விற்பனை நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அத்துடன் சீமெந்துகளை விற்பனை செய்ய மறுத்தல், இருப்பில் இருக்கும் போது தட்டுப்பாடு ஏற்படுத்துதல், பல்வேறு நிபந்தனைகளின் கீழ் விற்பனை செய்தல் மற்றும் உதிரி பாகங்களை சேமித்து வைத்தல் என்பன நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருப்படுகின்றன.

இதன்படி சட்டத்தை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply