நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

0

நீர் விநியோக கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை தூண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த வருடம் 7,200 மில்லியன் ரூபாவை நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறி உள்ளதாகவும் , ஆறு மாதங்கள் அல்லது 2000 ரூபாய்க்கு மேல் நிலுவையாக உள்ள நீர் பட்டியலுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 27 லட்சத்தில் 50,000 பேருக்கு மாதாந்தம் 50 மில்லியன் கனமீட்டர் குடிநீரை வழங்குகின்றது.

மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,100 மில்லியன் ரூபாயாக இருந்த நிலுவை கட்டணத் தொகையை செலுத்தாமையினால் டிசம்பர் மாதமளவில் அந்த தொகை 7,200 மில்லியன் ரூபாய் ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் மாதாந்த குடிநீர் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதம் பில்லில் 1.5 சதவீத தள்ளுபடியும் பணம் செலுத்த தாமதப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த பில்லில் 2.5 சதவீதம் தாமத கட்டணம் அறவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply