பஸ்களில் நின்றுகொண்டு பயணம் செய்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் முதல் குறித்த செயற்பாட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், ஆசன விதி மீறல்கள் தொடர்வதால், நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்கு, கட்டண மறுசீரமைப்புக்கு முன்னர் அரைபட்ட கட்டணத்தை அறவிடும் வகையில் புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.
இதன் பிரகாரம் அடுத்த வாரம் முதல் இரண்டு கட்டண முறைகளில் போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



