திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

0

தமிழகத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொவிட் பரிசோதனை செய்த சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

அவ்வாறு கொவிட் பரிசோதனை செய்த சான்றிதழ் இல்லாமல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை அலிபிரி சோதனைச் சாவடியில் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஊழியர்கள் கண்டறிந்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனால் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

சமீபத்தில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலை பரவுகிறது.

இதன் பிரகாரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் , 48 மணி நேரத்துக்கு முன்பாக கொவிட் பரிசோதனை செய்ததற்கான ஆர். டி. பி. சீ. ஆர். தாக்குதல் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என திருமலை – திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.

அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மாத்திரமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply