நமஸ்காரம்…!!

0

நாம் இரண்டு கைகளை கூப்பி நமஸ்காரம் செய்து வணங்கும் முறையிலும் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

காலையில் உதிக்கின்ற சூரியனையும், கோயில்களில் தெய்வங்களுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யும்போதும் அந்த இறைவனே நமக்கு எல்லாம் என்கிற “சரணாகதி” தத்துவத்தின் அடிப்படையில் இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.

நெற்றிக்கு நேராக இருகரங்களையும் கூப்பி மரியாதைக்குரிய நபர்களையும், சக மனிதர்களையும் நமஸ்காரம் செய்ய வேண்டும். மதியவேளை சூரியனையும், உயர்ந்த மனிதர்களையும், மகான்கள், சித்த புருஷர்கள் போன்றவர்களையும் நெஞ்சுக்கு நேராக இருகரங்களையும் கூப்பி, சிரம் தாழ்ந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

நம்மை பெற்றெடுத்த தாயையும், அஸ்தமன சூரியனையும் நமது வயிற்றுக்கு நேராக இருகரங்களையும் கூப்பி நமஸ்காரம் செய்து வழிபட வேண்டும்.

Leave a Reply