சட்டவிரோதமான சிகரெட் களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய காவல்துறை விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய உன் நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாககும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



