நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடல் பெருமளவிலான அந்நிய செலவாணியை பெற்றுத் தரக்கூடிய சுற்றுலா துறை போன்ற துறைகளில் எதிர்வரும் மாதங்களில் ஸ்திரத்தன்மையை படுத்துவதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் என கூறி உள்ளார்.
மேலும் வாகனங்கள் மற்றும் ஓடுகள் தவிர அத்தியாவசிய ஏனைய அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் பிரகாரம் பெருமளவிலான அந்நிய செலவாணி நாட்டைவிட்டு வெளியேறு என்று குறிப்பிட்டுள்ளார்



