40 வயதிலும், 20 வயது போலவே ஜொலிக்கலாம்…!!

0

நிறைய பேர் உடம்பை குறைக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்று சொல்லி டயட், உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

தொடர்ந்து ஒரு 3 மாதம் அல்லது 4 மாதம் டயட், உடற்பயிற்சியை செய்து விட்டு உடனே அதை நிறுத்தி விடுவார்கள்.

இப்படி ஒரு பழக்கத்தை தொடங்கிய பின்பு, அந்த பழக்கத்தை உடனடியாக விட்டு விட்டாலும் நம்முடைய உடலில் உடனடியாக சில மாற்றங்கள் தெரியத் தொடங்கும்.

வயதான தோற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. சரி இந்த வயதான தோற்றம் வந்து விட்டது. என்ன செய்யலாம்.

முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி. மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும்.

முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும்.

முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும்.
முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Reply