முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கொவிட் தொற்று உறுதி.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நான் இப்போது தனிமைப் படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வருகின்றேன்.

அத்துடன் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்தி வருகின்றது.

தயவு செய்து அனைவரும் கொவிட் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் இது வரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால் , அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

இதை செய்தால் மாத்திரமே உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க முடியும்.

மேலும் கொவிட் தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு செல்வேன் என்று கீர்திசுரேஷ் குறித்த பதிவில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply