தும்பையின் மருத்துவம் ..!!

0

தும்பை இலைகளை பயன்படுத்தி ரசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: தும்பை இலை, மிளகாய் வற்றல், கொத்துமல்லி, கருவேப்பிலை, புளிகரைசல், நல்லெண்ணெய், மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு, பூண்டு, சீரகம்.பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, பெருங்காய பொடி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் தும்பை இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.

புளிகரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த ரசத்தை குடித்துவர காய்ச்சல் தணிகிறது. உடல் வலி குறைகிறது. இருமல் இல்லாமல் போகிறது.

ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. உள் உறுப்புகளை விரைவாக இயங்க வைக்கிறது. சளி நீக்கியாகவும்,காது வலியை சரிசெய்யக் கூடியதாகவும் அமைகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ஒற்றை தலைவலி இருப்பவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம்.

அற்புத மூலிகையான தும்பையை துவையலாக சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

Leave a Reply