முன் நெற்றியில் வழுக்கை விழுகிறதா?

0

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கிராம்பு எடுத்துக்கொண்டு, அதனுடன் 5 பிரியாணி இலை மற்றும் மளிகை கடைகளில் கிடைக்கக்கூடிய ரோஸ்மேரி இலையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை மூன்று பொருட்களுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கிராம்பு பிரியாணி இலை மற்றும் ரோஸ்மேரி இலையில் ஆன்டி
ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கின்றன இவற்றில் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கிறது.

இவை மூன்றும் தண்ணீரில் நன்றாக கொதித்து நாம் ஊற்றிய தண்ணீர் பாதி அளவாக மாறிய பின்னர் அடுப்பை அனைத்து, இதனை அப்படியே ஆற வைக்கவேண்டும்.

பிறகு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை: தலைக்கு குளித்த முதல் நாளோ அல்லது மறுநாளோ தலையில் எண்ணெய் இல்லாமல் முடியை சிறு சிறு பகுதிகளாக பிரித்து முடியின் வேர் கால்களில் படுமாறு இந்த தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும்.

அவ்வாறு ஒவ்வொரு பகுதியாக பிரித்து தலை முழுவதும் ஸ்பிரே செய்துவிட்டு கைகளினால் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

தொடர்ந்து 15 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே தலைமுடியை சேர்த்து கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி கொட்டிய இடத்திலலும் புதிய முடி வளர ஆரம்பிக்கும்.

முடி கொட்டும் பிரச்சனை இருந்தாலும் அது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்

Leave a Reply