பிரதோஷ வேளை என்றால் என்ன?

0

இரவும், பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு உஷத் காலம் என்பது பெயர்.

உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர்.

இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவள்.

அவள் பெயராலேயே இது உஷத் காலம் என அழைக்கப்படுகின்றது. இதற்கு நேர் எதிராகப் பகலும், இரவும் சந்திக்கும் நேரம் ப்ரத்யுஷக் காலம் எனப்படும்.

சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின் அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் என்று அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷ காலம் என வழங்கு
கிறது என்பர்.

பிரதோஷ வேளையை ரஜ்னி முகவேளை எனவும் அழைப்பர்.

இதற்கு இரவின் முகம் என்று பொருள். நிகண்டுகள் பிரதோஷ காலத்தை, இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன.

இந்தப் பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்குச் சாயா என்பது ஒரு பெயராகும்.

இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகின்ற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் சாயரட்சை எனவும் அழைக்கப்படுகிறது

என்பர்.‘தோஷம்’’ என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது.

எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று பிரதோஷ வேளைக்குப் பண்டிதர்கள் விளக்கம் கூறுவர்.
0000

Leave a Reply