இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை மேலும் உயர்வு.

0

தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதிகளின் விலை இன்று முதல் மீள அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 400 கிராம் பால் மா பொதியொன்று 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 400 கிராம் பால்மா பொதியொன்றின் புதிய விலை 540 ரூபாவாகும்.

அவ்வாறு ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1345 ரூபாவாகும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டது.

அத்துடன் நுகர்வோர் விவகார அதிகார சபையால், பால்மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1195 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவல் அதிகரிக்கப்பட்டு 480 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 400 கிராம் உள்ளூர் பால்மவின் மாமாவின் விலையை 380 ரூபாவில் இருந்து 470 ரூபாய் வரையில் அதிகரிக்க மில்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply