இலங்கை பட்டினிச் சாவை நோக்கிச் செல்கின்றது .
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டின் நலன் கருதி அவசர தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
இல்லையேல் 2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே நாடும் அரசும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டின் சமகால நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



