ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவிசாவளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மானியன்கம பிரதேசத்தில் , அவிசாவளை காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளா ன்.
அத்துடன் 19 வயதுடைய அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



