நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் இன்று காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமன பட்டியல் வெளியிடப் பட்டமை போன்ற பல முக்கிய பிரச்சினைகளுக்கு எனக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் நேற்றைய தினம் இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போது இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் தெரிவித்திருந்தார்.



