தப்பிச் செல்ல முயற்சித்த சாரதிக்கு நேர்ந்த கதி.

0

மோட்டார் சைக்கிளில் தொங்கியநிலையில் சென்ற சந்தேகநபரை போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார்.

இதற்கமைய புறக்கோட்டை பிரதான வீதியில் கடமை யாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் வாகனம் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் வினாவிய போது அதன் உரிமையாளர் தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை உத்தியோகத்தருடன் வீதியில் இழுத்துக்கொண்டு சாரதி தப்பி செல்ல முயற்சித்துள்ளார்.

இருப்பினும் சுமார் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு பின் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி கவிழ்ந்தது.

குறித்த சம்பவத்தில் காவல்துறை உத்தியோகத்தர் படுகாயம் அடைந்ததுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply