முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு…!!

0

முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியை அதிகமாக வளர செய்ய தேவையான சத்து கருவேப்பிலையில் உள்ளது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் .

அந்த கறிவேப்பிலையை வைத்துதான் பின்வரும் இரண்டு குறிப்புகளும் சொல்லப்பட்டுள்ளது. –

முதலில் கருவேப்பிலை எண்ணெய் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்வோமா? முதலில் கருவேப்பிலையை காம்புகள் இல்லாமல் உருவி தண்ணீரில் போட்டு கழுவி ஈரம் இல்லாமல் உலர வைத்துக் கொள்ள வேண்டும்.

கருவேப்பிலை பச்சையாக இருந்தாலும் பரவாயில்லை. காய வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

கருவேப்பிலையில் தண்ணீர் மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தயாராக இருக்கும் இந்த கருவேப்பிலையிலிருந்து 2 கப் அளவு கருவேப்பிலைகளை மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.

2 ஸ்பூன் வெந்தயத்தையும் இந்த கருவேப்பிலைகளோடு போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலைக்கு 300ml அளவு தேங்காய் எண்ணெய் சரியான அளவாக இருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை வெந்தய விழுதை எண்ணெயில் சேர்த்து அதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் இதை காய்ச்சவேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்து பச்சை நிறத்திற்கு வரும்வரை எண்ணெயை சூடு செய்யுங்கள்.

அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த எண்ணெயை நன்றாக ஆறவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் தினம்தோறும் இந்த எண்ணெயை தலைக்குத் தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

மயிர்கால்களில் படும்படி 30 நாட்கள் இந்த எண்ணெய்யை தலைமுடியில் தேய்த்து வர நிச்சயமாக முடி உதிர்வில் வித்தியாசம் தெரியும்.

Leave a Reply