மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை.

0

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,584 உந்துருளிகளும், முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய வாகனங்களில் பயணிப்பவர்கள் உரியவாறு சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறார்களா என்பது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கையில் 778 போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 2,842 உந்துருளிகளிலும், 2,742 முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த 8,394 பேர் சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

இவர்களில் 2,363 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply