இலங்கை நிதி அமைச்சருக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்.

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் நிதியமைச்சர் இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மேலும் மேம்படுவது தொடர்பிலும் பேசப்பட்டது.

அதேநேரம் இந்தியா தமது பொருளாதார திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இதன்போது நன்றி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply