கால் பாதத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்….!!

0

எங்கு சென்றாலும் செருப்பு அணிவதை கடமையாக கொள்ளலாமே.

செருப்பு இல்லாமல் நடப்பதை அறவே தவிருங்கள்.

அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடான சாலைகளில் செல்லும் போது காலணி முக்கியம், அப்படி அணியவில்லை என்றால் சாலைகளில் உள்ள ஜல்லி கற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்கள் பாதங்களில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தும்.

வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத் தூய்மையாகவும், நகங்களின் கீழ்ப்பகுதியை அழுக்கு அண்டாமலும் பார்த்து கொள்வது உங்களின் ஒரு முக்கியக் கடமையாக கொள்ளுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் புண்ணை உருவாகத் துணை செய்கிறீர்கள் எனலாம்.

மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும்.

நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் துண்டிக்கலாம்

Leave a Reply