முன்னணி நடிகர் தல அஜித் வெளியிட்ட கருத்து.

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் அஜித்.

தற்போது நடிகர் அஜித் வலிமை நடித்துள்ளார் .

குறித்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கின்றது.

இதுவரையில் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தல அஜித் என்று அழைத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் பெருமதிப்புக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மை யான ரசிகர்களுக்கு ,

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதே , என்னைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போது என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்று குறிப்பிட்டால் போதுமானது.

அத்துடன் தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையும் குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply