இன்று முதல் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகள் ஆரம்பம்.

0

நாட்டில் ஏற்பட்ட கொவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன.

இந்நிலையில் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்ததையடுத்து மீண்டும் பாடசாலைகள் கட்டங் கட்டமாக திறக்கப்பட்டது.

இதன் பிரகாரம் முதற்கட்டமாக 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பப்பிரிவு வகுப்புகளும் கடந்த 25 ஆம் திகதி திறக்கப்பட்டது.

பின்பு மூன்றாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளிலும் க. பொ. த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகின.

தற்போது இதுவரையில் ஆரம்பிக்கப்படாமல் இருந்த 6, 7,8 மற்றும் ஒன்பதாம் தரங்களுக்கான கல்விச் செயற்பாடுகளும் இன்று முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply