சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் வர்த்தகர்கள் பேருந்து சாரதியினருக்கு காவல்துறையினர் விடுத்த விசேட எச்சரிக்கை.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 224 பயணிகள் பேருந்துகள் மற்றும் 70 ஒரு குளிரூட்டப்பட்ட பயணிகள் பேருந்துகளின் சாரதிகளுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 485 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல் மாகாணத்தில் மையமாகக் கொண்டு நேற்றைய தினம் நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகளில் 439 காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply