நாட்டின் பாதுகாப்புக்காக மாத்திரமே நாம் யுத்தம் செய்தோம்-பிரதமர்.

0

நாட்டு மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து இராணுவத்தினர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்கால தலைவர்களும், எதிர்கால தலைவர்களும் முன்னிற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே குறித்த தகவலை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்காக மிகக் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு அவற்றில் வெற்றி அடைந்த சந்தர்ப்பங்களில் தான் மிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன் .

அவ்வாறு நாட்டின் பாதுகாப்புக்காக மாத்திரமே நாம் யுத்தம் செய்தோம் என்பதுடன் ஒவ்வொரு ஜனாதிபதியும் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சித்தனர்.

ஜெ. ஆர். ஜெயவர்தன திம்புவில் வட்டமேசை விவாதங்களை நடத்தியது நினைவிருக்கின்றது.

ஆர் பிரேமதாசவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டன.

பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக சில கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டது.

அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தனியான பகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அவர்கள் எவருக்கும் நமது பாதுகாப்பு படை மீது நம்பிக்கை இல்லை .

ஒரு நாட்டின் பாதுகாப்பு படை மீது நம்பிக்கை இல்லை என்றால், அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை இழக்க நேரிடும்

மேலும் எனது இராணுவத்தை மறந்துவிட்டு, வெளிநாட்டு படைகளையும், வெளிநாட்டு தலையீடுகளையும் அனுமதித்தால் தற்போது நமது நாட்டில் ரத்த வெள்ளம் பாயும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply