600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட நேரம் நிகழும் சந்திரகிரகணம்.

0

சுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்ட நேரம் சந்திரகிரகணம் நிகழவுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது.

அத்துடன் இந்த சந்திர கிரகணத்தின் போது சந்திரன் 99% சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

குறித்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி முற்பகல் 11.32 க்கு ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்களும், 28 நிமிடங்களுக்கு நீடிக்கும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சந்திர கிரகணத்தின் முழுமையான காலம் 6 மணித்தியாலங்களும் ஒரு நிமிடமும் ஆகும்.

இருப்பினும் இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது வட அமெரிக்கா,தென் அமெரிக்கா , பொலினிசியா, அவுஸ்திரேலியா மற்றும் வட கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் தென்படவுள்ளது.

Leave a Reply