தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதன் பிரகாரம் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு கிலோ கிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் கேரட் 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சைமிளகாய் என்பன 240 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை விட கறிமிளகாய் ஒரு கிலோ கிராம் 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 170 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



