60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி.

0

இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தடுப்பூசியை நாளை முதல் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவதாக மூன்றாவது பூஸ்டர் தடுப்பு ஊசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மாத்திரமே இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply