இன்றும்,நாளையும் வட தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை- விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0

தற்போது இந்தியாவில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரம் அடைந்து வருகின்றது.

இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அத்துடன் வங்க கடலில் நேற்று தினம் உருவான தாழ்வு பகுதியில் இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வட தமிழக கடலோர பகுதிகளை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்றும் நாளையும் வட தமிழகத்தில் மிகவும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply