சீரற்ற காலநிலையால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

0

தற்போது இலங்கையில் நிலவும் கடும் மழையுடன் வானிலை காரணத்தால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதிக்குள் குறித்த மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் குருநாகல் – உடுப்பொத்தாவ பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்குண்டு காணாமல் போயிருந்த இருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர்.

அவ்வாறு குருநாகல் மாவட்டம் ரீதிகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் தம்பதியினர் மரணித்துள்ளனர்.

மேலும் குறித்த அனர்த்தம் நேற்று இரவு சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு கேகாலை – கலிகமுவ- ஹத்னாகொட பகுதியில் இன்று அதிகாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டது.

இதன் பிரகாரம் வீடு ஒன்று மண்ணில் புதைந்த தோடு அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் தாய் மாத்திரம் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply