எதிர்வரும் நாட்களில் இலங்கை முதலீட்டுச் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இலங்கை முதலீட்டு சபை கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது புதிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தினை நிறுவுவதற்கான மதிப்பீடுகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி தேசிய இளைஞர் சேவை மன்றத்துடன் இளைஞர் சேவை தனியார் நிறுவனமும் அழைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எதிர்வரும் 17 ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



