தமிழகத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணத்தினால் 17 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
அத்துடன் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அவ்வாறு பிற மாவட்டங்களில் நேற்றைய தினம் ஒரு நாள் மாத்திரம் விடுமுறை அறிவித்திருந்த நிலையில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், நகபட்டினம், விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை, விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



